அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,90,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இதுவரை உலக அளவில் 36.63 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 56.55 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7.45 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 390, 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவில் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது 7,458, 8513 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மேலும் 2,251 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 9 இலட்சத்து 01 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 45, 569, 419 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 28, 117, 392 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பொதுமக்களிடம் போதுமான ஆதரவு இல்லை. ஒட்டுமொத்தமாக அமெரிக்க தடுப்பூசி இயக்கம் மந்தமாக உள்ளது. தடுப்பூசி போடத்தொடங்கி 13 மாதங்களுக்கு மேலாகியும் அமெரிக்கர்களில் 63 சதவீதத்தினர் மட்டுமே (21 கோடி பேர்) முழுமையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.