தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிவித்தல்

கொவிட் தொற்று தொடர்பிலான தனிமைப்படுத்தல் காலம் குறித்து புதிய அறிக்கையொன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் மருந்து அருந்தாமல், காய்ச்சல் ஏற்படவில்லை என்றால், குறித்த நபரை 7 நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் கொவிட் நோயாளர்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிஆர் அல்லது ரெபிட் அன்டீஜன் பரிசோதனை மேற்கொண்டு 7 நாட்களுக்குள், இறுதி 48 மணித்தியாலங்களில் எந்தவித மருந்தும் அருந்தாது காய்ச்சல் நிலைமையோ அல்லது கொவிட் அறிகுறிகளோ இல்லை என்றால், குறித்த நபரை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்க முடியும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE