பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இதற்கு ஓரளவு பலன் கிடைத்தாலும் பரவல் முற்றிலுமாக குறைந்துவிடவில்லை. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தற்போதைக்கு தொடரும். அடுத்த வாரம் முதல் முகக்கவசம் அணியவோ அல்லது வீட்டிலிருந்து பணியாற்றுவதோ தேவையில்லை.
வீட்டில் இருந்தவாறு பணியாற்றுமாறு ஊழியர்களை இனி அரசு அறிவுறுத்தாது. கொரோனா சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்ற நடைமுறை முடிவுக்கு வரும். ஆனால், வணிக நிறுவனங்கள் விரும்பினால் கொரோனா சான்றிதழ் நடைமுறையை தொடரலாம். இவ்வாறு அவர் கூறினார்.