சீனாவில் நோய்த்தாக்கம் அதிகரிக்கும் நிலையில் குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை அடுத்து சீனாவில் கொரோனா தாக்கம் உச்சத்தை எட்டியது. விரைவில் குளிர்கால ஒலிம்பிக் சீனாவின் டிஜியான் நகரில் நடைபெற உள்ள நிலையில் தினசரி 160 பேர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தற்போது சர்வதேச வீரர்கள் தயாராகி வருகின்றனர். எல்லைகளில் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்குமேல் முழு ஊரடங்கை இட்டால் அது சீனப் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். உலகத்தையே தற்போது அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் தாக்கத்தை சீனா கடந்து விட்டதாகவும் தற்போது வட அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் புதிய ரகமே சீனாவை புதிதாக பாதித்து உள்ளதாகவும் வைரஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கனடா அல்லது அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு வந்த பயணிகளிடம் இருந்து இந்த புதிய வகை சீனாவின் முக்கிய மாகாணங்களில் உள்ள சீனர்களை தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது குளிர்கால ஒலிம்பிக் நடைபெறுமா அல்லது நிறுத்தப்படுமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ள நிலையில் சீன கம்யூனிஸ அரசு இதுகுறித்து ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.