ஒஸ்லோவில் மீண்டும் கடுமையாகும் “கொரோனா”(corona) கட்டுப்பாடுகள்!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் “கொரோனா” கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படுகின்றன. புதிதாக அவதானிக்கப்பட்டுள்ள “Omikron” வைரஸின் தாக்கம் இங்கும் அவதானிக்கப்பட்டுள்ளதால், இக்கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.

“Omikron” வகையிலான வைரஸின் தாக்கத்தால் உயிரிழப்பு வீதம் மிகக்குறைவாக இருந்தாலும், ஏற்கெனவே தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களையும் இவ்வகையான வைரசுக்கள் தாக்குவதால், பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே வரையறைகளை இறுக்குவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மக்கள் கூடும் பொது இடங்களில் போதுமான இடைவெளிகளை கடைப்பிடிக்க முடியாத இடங்களில், அதாவது, அங்காடித்தொகுதிகள், பொதுப்போக்குவரத்துக்கள், உள்ளக அரங்கங்கள், வாடகை மகிழூந்து பயணங்கள், உணவகங்கள், இரவுக்கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசங்களை பாவிப்பது கட்டாயமாகிறது. எனினும் இவ்வரைமுறை 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பொருந்தாது.

வீடுகளிலிருந்தபடியே பணிகளை கவனிக்கக்கூடியவர்கள் “வீட்டு பணிமனைகள் / Hjemmekontor / Home Office” முறைமையை பின்பற்றல்.

தனிப்பட்ட / உள்ளக / பொது மற்றும் வாடகைக்கு அமர்த்தப்படும் ஒன்றுகூடல் இடங்களில் அதிகளவாக 100 பேர்கள் மட்டுமே கூட முடியுமென வரையறுத்தல்.

உணவகங்கள் / மதுபானச்சாலைகள் போன்றவற்றில் கூடுபவர்களின் விபரங்களை பதிவு செய்தல்
(பெருந்தொற்று அவதானிக்கப்படுமிடத்து, அவ்விடங்களில் ஒன்றுகூடியவர்களை எச்சரிக்கும் விதமாக….).

உணவகங்கள் / மதுபானச்சாலைகளில், விருந்தினர்கள் இருக்குமிடத்திற்கு உணவு / பானங்களை சமர்ப்பித்தல்.

உணவகங்கள் / மதுபானச்சாலைகளில் கூடும் அனைவரும் கட்டாயமாக இருக்கைகளை பயன்படுத்துதல்.

உள்ளிட்ட வரையறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படுமென அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE