
புத்தாண்டுக்குப் பிறகு ஒரு பெரிய அளவிலான நோய்த்தொற்று ஏற்படலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து முன்னரை விடவும் அதிகமாக இருக்கும் என்று நோர்வே சுகாதார பணியக இயக்குனர் Camilla Stoltenberg தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை பெறுவதற்கு மறுத்தவர்கள்,மீண்டும் சிந்திக்கும்படி FHI தெரிவிக்கிறது. நோய்த்தொற்று அதிகமாக இருப்பதால், தடுப்பூசி போடப்படாதவர்கள் விரைவில் நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம். தடுப்பூசி உங்களை வெகுவாகப் பாதுகாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது