சித்தார்த் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை

பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பாடு செய்திருந்த அரசு நிகழ்ச்சிகளி்ல் பங்கேற்க முடியாமல் திரும்பினார். இது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் பிரதமருக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பில்லை என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் பிரபல இறகுபந்து வீராங்கனை சாய்னா நேவால், “பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த தேசமும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அராஜகவாதிகளால் பிரதமர் மோடி மீதான கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள சித்தார்த். அவரின் பாலினம் குறித்து அவதூறான வார்த்தைகளை பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்தியாவுக்காக விளையாடி பெருமை சேர்த்த ஒரு வீராங்கனையை பாலினம் குறிபிட்டு கொச்சைபடுத்துவதா என்ற விமர்சனம் எழுந்தது.

இதை தொடர்ந்து இந்திய மகளிர் ஆணையம் மகாராஷ்டிரா, மற்றும் தமிழ்நாடு போலீஸ் டிஜிபிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் இந்தியாவின் பெருமைக்குரிய வீராங்கனை சாய்னாவை பாலினம் குறிப்பிட்டு விமர்சித்த நடிகர் சித்தார்த்தின் சமூகவலைதள கணக்கை முடக்க வேண்டும். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இதற்கிடையி்ல் சித்தார்த் தான் ஒரு உண்மையை வெளிப்படுத்த முயற்சித்ததாகவும் யாரையும் அவதூறாக சித்தரிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE