டார்ச்சர் பண்ணாதீங்க – சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாய் நடந்தது. நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய நாயகன் சிம்பு, பெற்றோருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் வைத்தார்.

அவர் கூறுகையில், ‛‛தயவு செய்து பசங்களை திருமணம் செய்ய சொல்லி பெற்றோர்கள் டார்ச்சர் பண்ணாதீங்க. அவசரப்பட்டு திருமணம் செய்த பலருடைய வாழ்க்கை பிரச்னைகளில் சிக்கியதை நாம் பார்க்கிறோம்.

நமக்கும் மேலே ஒருத்தர் இருக்கார். சரியான நேரத்தில் எல்லாவற்றையும் செய்வார் என்று கூறியவர், அப்பா அம்மாவை யாரும் கை விடாதீங்க என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.

தொடர்ந்து பேசிய சிம்பு, நடிகர் கமலிடம் உங்களின் எந்த படத்தை நான் ரீ-மேக் செய்து நடிக்கணும் அல்லது இரண்டாம் பாகத்தில் நடிக்கணும் என்று கேட்டார். அதற்கு, ‛‛நீங்கள் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். ரீமேக், இரண்டாவது பாகம் எல்லாம் வேண்டாம். என்னுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடியுங்கள்” என்றார் கமல்.

Leave a Reply

Your email address will not be published.