மீண்டும் நாதஸ்வரம் சீரியல் : மறுஒளிபரப்பு

சின்னத்திரையில் சீரியல்களின் கை ஓங்கி இருந்த நேரத்தில் ஒளிபரப்பான மெகா தொடர் நாதஸ்வரம் 2010ம் ஆண்டு முதல் 2015 வரை 5 வருடங்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பானது. மொத்தம் 1356 எபிசோட்களை கொண்ட தொடர் இது.

இதனை திருமுருகன் இயக்கி நடித்தார். அவருடன் மவுலி, பூவிலங்கு மோகன், ஸ்ரீத்திகா, ஜெயந்தி நாராயணன், தேனி சத்யபாமா, கீதாஞ்சலி, ரேவதி, ஸ்ருதி, ஜெயஸ்ரீ உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த தொடர் தமிழ்நாட்டின் கூட்டுக்குடும்ப கலாச்சாரத்த்தையும் அதில் எழும் சிக்கல்களையும் பற்றி பேசியதால் பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பாகிறது. நாளை மறுநாள் (4ம் தேதி) திங்கள் முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published.