‛நினைவிருக்கும் வரை விவேக்’ : வீடியோ ஆல்பம் வெளியீடு

நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை வடபழனியில் நடிகர் எம்.எஸ் .பாஸ்கர் உள்பட சின்னத்திரை நடிகர்கள் பலரும் நினைவிருக்கும் வரை விவேக் என்ற பெயரில் ஒரு வீடியோ ஆல்பம் வெளியிட்டார்கள். அப்போது நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசுகையில், சின்ன கலைவாணர் விவேக் ஒரு நல்ல கலைஞர். எனக்கு பல படங்களில் நடிப்பதற்கு அவர் வாய்ப்பு வாங்கி தந்துள்ளார். மக்களிடையே நல்லுள்ளம் நற்பண்பு கொண்ட நல்ல கலைஞர். அப்துல் கலாம் மீது மிகுந்த அன்பு கொண்டதால் அவரது பாதையில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வந்தார் . அந்தவகையில் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தருக்கு இடையிலான நட்பு போன்றது அப்துல்கலாம் விவேக்கின் நட்பு என்று கூறிய அவர், நடிகர் விவேக்கின் இழப்பு எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. அவரது ஆன்மா சாந்தி அடைந்திருக்கும் என்று நம்புகிறேன் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.