காதலுக்காக துளு மொழி கற்றுக்கொண்ட சித்து

கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக நடித்து வந்த சித்து – ஸ்ரேயா அஞ்சன் ஜோடி தான் ரீலிலும், ரியலிலும் பல ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்று கூறலாம். திருமணத்திற்கு முன்னும் சரி, பிறகும் சரி இவர்களது காதல் வாழ்க்கை என்பது செடியில் பூத்த புத்தம் புது ரோஜாவை போல் அழகாக சிரிக்கிறது. சமீபத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா அஞ்சனிடம் இருவரது காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஸ்ரேயா, ‘கலர்ஸ் தமிழின் திருமணம் தொடரில் நடித்த போது தான் எனக்கும் சித்துவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. சித்து நான் எப்படியெல்லாம் ஒரு கணவர் இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியெல்லாம் இருக்கிறார். அதற்காகவே அவரை மிஸ் செய்யக்கூடாது என்று நினைத்தேன். திருமணத்திற்கு பிறகு எங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக சென்று கொண்டிருக்கிறது. இது தெரிந்தால் சீக்கிரமாகவே திருமணம் செய்திருப்போம். எங்களுக்கு இடையே உள்ள புரிதலும் அழகானது.

நான் ஷூட்டிங் முடித்து வரும் நேரம் சித்து ஷூட்டிங் கிளம்பி விடுவார். நான் ஷூட்டிங் போகும் போது தான் அவர் வருவார். இருந்தாலும் எங்களுக்கான நேரத்தை நாங்கள் சரியாக ஒதுக்கிக் கொள்வோம். எங்களின் காதல் வீட்டுக்கு தெரிந்து இருவீட்டார் சம்மதம் வாங்கிய பிறகும், துளு மொழி கற்றுக்கொண்டுதான் என் வீட்டில் வந்து பெண் கேட்பேன் என்று சொல்லி அதனை கற்றுக்கொண்ட பின் தான் பெண் கேட்டார். சித்து எனக்காக இது போல பல விஷயங்களை இது போல செய்துள்ளார்’ என கண்களில் காதல் மலர் ஸ்ரேயா அஞ்சன் பேட்டியளித்துள்ளார். இவர்களது காதல் கதை ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE