கனடா பிரதமரையும் விட்டு வைக்காத கங்கனா

பாலிவுட் நடிகை கங்கனா தனது மனதில் தோன்றும் கருத்துக்களை துணிச்சலுடன் வெளியிடக்கூடியவர். இந்திய தலைவர்களை கடுமையாக சாடி வந்த கங்கனா இப்போது கனடா பிரதமரையும் விட்டு வைக்கவில்லை.

கனடாவில் கொரோனா தடுப்பூசி சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். நிலவரம் கலவரமாகவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு படைகளின் உதவியுடன் தலைமறைவான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கங்கனா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: கன்னட பிரதமர் ட்ரூடோ இந்திய எதிர்பார்ளர்களை தொடர்ந்து ஆதரித்து வந்தார். ஊக்குவித்து வந்தார். அவரது நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்காக அவர் ரகசிய இடத்தில மறைந்துள்ளார். அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது. கர்மா தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE