
ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
நாகா உதயன் இசையமைத்திருக்கிறார், கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். படம் சாதி பிரச்சினைகளையும், ஆணவக் கொலையையும் பற்றி பேசுகிறது. அது தொடர்பான சட்டம் மற்றும் சமூக போராட்டத்தையும் சொல்கிறது என்கிறார் இயக்குனர் ஆண்டனி சாமி. படம் வரும் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.