தெலுங்கு பக்கம் வருவாரா ஸ்ரீதேவி மகள்

பாலிவுட்டின் நம்பர் 1 நடிகையாக விளங்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்று இந்திய கனவுக்கன்னியாக விளங்கியவர்.

ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் 2018ல் வெளிவந்த ‘தடக்’ ஹிந்திப் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஓடிடி தளத்தில்தான் வெளிவந்தன. தற்போது இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்த முடித்துள்ளார்.

ஜான்வியை தெலுங்குப் பக்கம் அழைத்து வர பல முன்னணி நடிகர்களும், இயக்குனர்களும் முயற்சி செய்தனர். ஆனால், அவர் பாலிவுட்டை விட்டு தென்னிந்தியப் படங்கள் பக்கம் வர இதுவரை சம்மதிக்காமல் இருக்கிறார்.

ஆனால், பிரபல தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் அடுத்து விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்க உள்ள ‘ஜனகண மன’ படத்தில் நடிக்க ஜான்வி சம்மதித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது போல, ‘உப்பெனா’ இயக்குனரான புச்சிபாபு அடுத்து ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடிக்க இயக்க உள்ள படத்திலும் ஜான்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்கிறார்கள்.

கடந்த நான்கு வருடங்களில் ஹிந்தியில் இன்னும் தனி முத்திரை பதிக்காமல் இருக்கும் ஜான்வி தெலுங்கு வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வாரா என்பது இனிமேல்தான் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE