சினிமா மற்றும் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுஜிதா தற்போது வரை தென்னிந்திய மொழிகளில் சில படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து கலக்கி வருகிறார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். தற்போது அவர் இயக்குநர் அவதாரம் எடுத்து இரண்டு விளம்பர படங்களை, நடிகை ஹன்சிகாவை வைத்து இயக்கியுள்ளார். இதன் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இயக்குநராக தான் செய்த பணிகள் குறித்தும், ஹன்சிகாவுடன் இணைந்து ஷுட்டிங் செய்த அனுபவங்கள் குறித்தும் சுஜிதா பகிர்ந்துள்ளார்.
சுஜிதாவின் கணவர் விளம்பர பட இயக்குநர். அவர் தனது மனைவியின் ஆசையை புரிந்து கொண்டு, இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்ததுடன், உடனிருந்து இயக்குநருக்கான வித்தகளை கற்றுக்கொடுத்ததாக சுஜிதா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.