சொந்தமாக கேரவன் வாங்கிய குணச்சித்திர நடிகர்

தெலுங்கு திரையுலகில் பிஸியான குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் நடிகர் நரேஷ். கடந்த வருடம் தெலுங்கில் வெளியான ஜதிரத்னாலு, ரங்தே, துருஷ்யம்-2, டக் ஜெகதீஷ், மேஸ்ட்ரோ என பல படங்களில் இவர் நடித்துள்ளார். இந்த வருடமும் அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. இதனால் தற்போது தனக்கென சொந்தமாக தனி கேரவனே வாங்கி விட்டார் நரேஷ்.

மம்முட்டி, அல்லு அர்ஜுன் போன்ற வெகு சில நடிகர்களே தங்களுக்கென சொந்தமாக கேரவன் வைத்திருக்கும் நிலையில் ஒரு குணச்சித்திர நடிகரான நரேஷ் கேரவன் வாங்கி இருப்பது தெலுங்கு திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நரேஷ் கூறும்போது, “கடவுள் அருளால் எனக்கு கைநிறைய படங்கள் இருக்கின்றன. எழுதுபது சதவீத நாட்கள் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கிறேன். எங்களை போன்ற குணச்சித்திர நடிகர்கள் பெரும்பாலும் படப்பிடிப்பு இடைவேளையில் கார்களில் தான் ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படியே கேரவன் ஒதுக்கினாலும் இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து அதை பகிர்ந்துகொள்ளும் விதமாகத்தான் இருக்கிறது. இந்த அசாதாரண சூழலில் அப்படி பகிர்ந்து கொள்வது, கொரோனா தொற்று பாதிப்புக்கு வழிவகுத்து விடும் அபாயம் இருக்கிறது. அதனாலேயே எனக்காக தனியாக கேரவன் ஒன்றை வாங்கிவிட்டேன். இது எனக்கு இரண்டாவது வீடு மாதிரி” என கூறுகிறார் நரேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE