
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை தயாரித்த போனி கபூரே மீண்டும் அஜித் – எச்.வினோத் இணையும் படத்தையும் தயாரிக்கிறார்.
இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஏகே 61 என்ற பெயரில் தயாராகும் அஜித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த படத்துக்கும் வலிமை படத்துக்கு ஒளிப்பதிவு நீரவ்ஷாவே ஒளிப்பதிவு செய்கிறார். அஜித்தின் வேதாளம், விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத் இசைப்பதும் உறுதியாகி இருக்கிறதாம்.
இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தனது 61ஆவது படத்தில் அஜித் குமார் இரண்டு வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு வேடம் வில்லன் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வாலி படத்தில் ஹீரோ – வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்த அஜித், மங்காத்தா படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது தனது புதிய படத்திலும் அவர் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.