5 திரை நட்சத்திரங்களுக்கு கொரோனா

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் 3 நடிகைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தெரிய வந்தது. கொரோனா பாதிப்புகள் பாலிவுட் நட்சத்திரங்களை போன்று கோலிவுட் நட்சத்திரங்களையும் தாக்க தொடங்கி உள்ளது.

த்ரிஷா
நடிகை த்ரிஷா புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக தனது தோழிகளுடன் லண்டன் சென்றுள்ளார். அங்கு அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது லண்டனில் உள்ள தோழி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பில்லை. இப்போது குணமடைந்து வருகிறேன். சில பரிசோதனைகள் முடிந்த பிறகு நாடு திரும்புவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சத்யராஜ்
இது தவிர நடிகர் சத்யராஜுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லட்சுமி மஞ்சு
தெலுங்கு தயாரிப்பாளரும், நடிகையுமான லட்சுமி மஞ்சுவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்சுமியின் சகோதரரும் நடிகருமான மனோஜ் மஞ்சுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் லட்சுமியும் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஷெரீன்
ஏற்கெனவே கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த நடிகை ஷெரீனுக்கு நேற்று மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டது. அவர் கூறுகையில், ‛‛ஒரு முறை வந்து சென்றால் பின்பு கொரோனா வராது என்று நினைக்காதீர்கள் எனக்கு வந்திருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள்” என்றார்.

ஸ்வாரா பாஸ்கர்
பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர் குடும்பத்தினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE