ஈஃபிள் டவர் முன்பாக மாஸ்ஸா போஸ் கொடுத்த விஜய் டிவி டி.டி ..!

துபாய், பிரான்ஸ் என உலகம் சுற்றும் மங்கையாக மாறியுள்ளார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டன்.பாரிஸ் நகரத்துக்கு சென்றுவிட்டு ஈஃபிள் டவர் முன்பாக போட்டோ எடுக்காமலா இருப்பார் டிடி நீலகண்டன்.

கடும் குளிரில் வெள்ளை சட்டை, நீல நிற பேன்ட் மற்றும் கூலர்ஸ் அணிந்து கொண்டு செம மாஸாக போஸ் கொடுத்து ஈஃபிள் டவரின் மொத்த வரலாற்றையும் கேப்ஷனாக கொடுத்துள்ளார்.ஈஃபிள் டவர் அருகே கடுங்குளிரில் நின்றபடி போஸ் கொடுத்த டிடி நீலகண்டன் அதுபற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் ஷேர் செய்துள்ளார்.

கோடை காலத்தில் 6 இன்ச் உயரமாகவும் குளிர் காலத்தில் 6 இன்ச் குறைவாகவும் இருக்குமாம் இந்த ஈஃபிள் டவர்.

 

 

20 ஆண்டுகளில் இடித்து விடலாம் என்று எண்ணியே இதனை கட்டியதாகவும் பின்னர் இதன் அழகில் மயங்கி அப்படியே விட்டு விட்டார்கள் என்றும் அமெரிக்க பெண்மணி இந்த ஈஃபிள் டவரை திருமணம் செய்து கொண்டு எரிகா ஈஃபிள் என தனது பெயரையே மாற்றிக் கொண்டார் என்றும் டிடி பதிவிட்டுள்ளார்.

 

திடீரென டிடி நீலகண்டன் இப்படி துபாய், பிரான்ஸ் என சுற்றுலா செல்கிறாரே ஏதாவது பெரிய புதையல் கிடைத்து விட்டதா என ரசிகர்கள் கேட்டு விடக் கூடாது என்பதற்காக சிறு வயது முதலே இதுக்காக காசு சேர்த்து வைத்தேன் என பின் குறிப்பு எல்லாம் போட்டு லைக்குகளை போடுங்க என கெஞ்சி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE