51 மற்றும் 52 வாரங்களில் கோவிட்-19, Influansa மற்றும் RS வைரஸ் தொற்றுகளின் தொற்றுநோய்கள் தொடர்ந்து அதிகரித்தன. சுவாச நோய்த்தொற்றுகளுடன் புதிதாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கோவிட்-19ஐ விட காய்ச்சலுடன் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் புதிதாக சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் குறைவாக உள்ளது.
நோர்டிக் நாடுகள் உட்பட பல நாடுகள் ஒரே நேரத்தில் Influansa, கோவிட்-19 மற்றும் RS வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் கணிசமான அழுத்தத்தை எதிர்கொள்கின்றன.
நோர்வேயில், தொற்றுநோய்க்கு முந்தைய எல்லா ஆண்டுகளையும் விட சுவாச நோய்த்தொற்றுகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் படுவோர் அதிகமாகி உள்ளது.
தொற்றுநோய்கள் சில வாரங்களில் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை குளிர்காலம் முழுவதும் தொடரலாம் என FHI சுகாதார மையம் தெரிவிக்கின்றது.