நேற்று முதல் அமுலாகும் வகையில், சதொச விற்பனையக வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யப்படும் 8 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, வெள்ளை நாடு, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி, நெத்திலி, வெள்ளைப்பூண்டு மற்றும் கோதுமை மா என்பனவற்றில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் பசந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி கிலோகிராம் ஒன்றின் விலை 185 ரூபாவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோகிராம் 194 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 429 ரூபாவாகவும், சதொசயில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 279 ரூபாவுக்கும், நெத்தலி ஒரு கிலோகிராம் ஆயிரத்து 350 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் சதொச நிறுவனத் தலைவர் பசந்த யாபா அபேவர்தன கூறியுள்ளார்.