முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமனம்

 

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் ,பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, ​​1952 ஆம் ஆண்டு இவர் பிரித்தானிய மகாராணியான மகுடம் சூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானபோது, ​​அவரது உறவினர்கள் அனைவரும் ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் கூடியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது உடல் இன்று லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE