அக்கடிதத்திலிருந்து சில குறிப்புக்கள்:
2022 வசந்த,கோடை காலத்தில் கொரோனா தொற்று விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படலாம்.
1.நகராட்சிகளில் தடுப்பூசி போடுவதற்கான தயார்நிலை
2.கொரோனா மற்றும் பருவகால காய்ச்சல் தடுப்பூசிகளைத் திட்டமிடுதல்
பிப்ரவரி 7 தேதியிட்ட கடிதத்தில், வாரத்திற்கு 400,000 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு நகராட்சிகள் தயாராக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் உத்தி மற்றும் செயல் திட்டத்தில், தடுப்பூசியே வரவிருக்கும் தொற்றுநோய்களின் தீவிர நோய்ச் சுமையைத் தடுப்பதற்கான மிக முக்கியமான கருவியாக உள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டம் யூன் 2023 வரை தொடரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேசிய பொது சுகாதார நிறுவனம் சர்வதேச அளவிலும் நோர்வேயிலும் தொற்றுநோயின் வளர்ச்சியை கண்காணிக்கிறது. தடுப்பூசியின் தேவையும் மதிப்பிடப்படுகிறது
வசந்த காலத்திலும், கோடைகாலத்திலும் தொற்று நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தடுப்பூசி பற்றிய பரிந்துரைகளிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.
65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், ஆபத்தான கடும் நோய்க்கு உள்ளானவர்களுக்கும் புதிய மருந்தை வழங்குமாறு நகராட்சிகள் கேட்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேவைகளைப் பொறுத்து விரைவான மேம்பாட்டிற்கான செயல் திட்டங்கள் கொணரப்படும். நகராட்சிகள் தேவைக்கு ஏற்ப திட்டமிடலினை மேற்கொண்டு தடுப்பு ஊசிகளை வேண்டியவர்களுக்கு செலுத்துதல் வேண்டும்.
யாருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்? எந்த வளாகம்? மற்றும் பணியாளர்கள், உள்ளிட்ட விடயங்களை நகராட்சி எவ்வாறு மேற்கொள்ளும் என்பதை திட்டத்தில் விவரிக்க வேண்டும்.
தடுப்பூசியை முழுமையாகப் பெற விரும்பும் அனைவருக்கும் நகராட்சிகள் வசதியினை செய்து கொடுத்தல் வேண்டும்.
சலுகைகள் எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதை நகராட்சிகளே தேர்வு செய்து, அத்தகைய நிலையான சலுகைகளுக்கு ஒத்துழைக்க முடியும்.
வளங்களை சேமிக்கவும், வீணாவதை தவிர்க்கவும். இது ஒரு பிரத்தியேக தடுப்பூசி மையமாக இருக்க வேண்டியதில்லை.
தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக நகராட்சிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கும்.
அரசாங்கம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது, தேவைப்பட்டால் தேவையான நடவடிக்கைகளை அரசு பரிசீலிக்கும் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.