சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் நகரில் கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கொரோனா தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உள்ளூர் நிர்வாகங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்கிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைஅடுத்து பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சீன அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன.