மாறனில் பத்திரிகை நிருபராக தனுஷ்

தனஷின் 43வது படமான மாறன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரி்த்துள்ளார். மாபியா, துருவங்கள் 16, நரகாசுரன் படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.. தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர்களுடன் மகேந்திரன், அமீர் சுல்தான், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனசும், மாளவிகா மோகனன் இருவருமே பத்திரிகையாளராக நடித்திருக்கிறார்கள். சக்தி வாய்ந்த அரசியல்வாதியான சமுத்திரகனியின் பரம ரகசியம் ஒன்றை கண்டுபிடிக்கிறார் தனுஷ். அது வெளிவந்தால் சமுத்திரகனியின் ஒட்டுமொத்த கேரியரும் அழிந்து விடும். இதை தொடர்ந்து தனசுக்கும், சமுத்திரகனிக்கும் இடையில் நடக்கும் ஆட்டமே படம். இதில் ராம்கி தனுசின் தந்தையாக நடித்திருக்கிறார். நேற்று வெளியிடப்பட்ட இதன் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE