உக்ரைன் எல்லையில் ரஷ்யா 100,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் மிக அதிகமாக உள்ளது. உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு எதிராக நேட்டோவும் அமெரிக்காவும் ரஷ்யாவை எச்சரித்துள்ளன.
உக்ரைனில் புதிய மோதல்கள் வெள்ளிக்கிழமை, உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உக்ரேனிய அரசாங்கப் படைகளுக்கும் பிரிவினைவாதப் படைகளுக்கும் இடையே புதிய மோதல்கள் ஏற்பட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிவினைவாதப் படைகள் ரஷ்ய ஆதரவுடன் பிரிந்த குடியரசுகளுக்காகப் போராடுகின்றன, ஆனால் உக்ரைனுடன் அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தத்தில் உள்ளன.
ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் (OSSE) அவதானிகள் எல்லைப் பகுதிகளில் உள்ளனர். இருதரப்புக்கும் இடையே 80 க்கும் மேற்பட்ட போர் நிறுத்த மீறல்களை பதிவு செய்துள்ளதாக அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல்கள் அதிகமாகி உள்ளது என றோய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
ரஷ்யா பிரிந்து சென்ற குழுக்களை ஒரு படையெடுப்பிற்கு பயன்படுத்தும் என்று கூறப்படுகின்றது. அப்படி ஒரு படையெடுப்பு நடக்காது என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது.
அதே நேரத்தில் லுகன்ஸ்கா நகரில் கையெறி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக AFP செய்தியாளர் தெரிவிக்கிறார்.