நோர்வே அரசாங்கம் கிட்டத்தட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் நீக்கியுள்ளது.
எங்களுக்கு இடையே சமூக இடைவெளி, மற்றும் முக கவசம் அணிதல் போன்ற பொதுவான ஆலோசனையை நாங்கள் அகற்றுகிறோம். இவ்வாறு நோர்வேயின் பிரதமர் Jonas Gahr Støre (Ap) ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த நாளுக்காகவே காத்திருந்தோம். இப்போது நாம் சாதாரண வாழ்க்கையினை வாழ ஆரம்பிக்கலாம். சமூக கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுக்கள், ஒன்றுகூடல்கள், ஆலய வழிபாடுகள் அனைத்திலும் முன்பு போல் பங்கு கொள்ளலாம் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.