ராகமை மருத்துவப் பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரை விட அருந்திக பெர்னாண்டோ ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்பவர் என உடுவே தம்மாலோக்க
புத்தளம் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்கள், தவறுகள், அநீதிகள்,மோசமான சம்பவங்கள் போன்று இலங்கையில் எந்த மாவட்டத்திலும் நடப்பதில்லை.
அருந்திக பெர்னாண்டோவே அனைத்து மோசமான குற்றவியல் சம்பவங்களுக்கும் முன்னோடி என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.
புத்தளம் மாவட்டத்தில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கடந்த வாரம் நடந்தது. எனினும் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யப்படுவதை அருந்திக பெர்னாண்டோ தலையிட்டு தடுத்தார் எனவும் உடுவே தம்மாலோக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.