நாட்டில் வருடாந்தம் சுமார் 600 மில்லியன் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கரண்டிகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு சுமார் 50 மில்லியன் பிளாஸ்டிக் கரண்டிகள் பயன்படுத்திய பிறகு வீசப்படுவதாகவும் ,குறிப்பாக தயிர், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களுக்காகவும், உணவு பதப்படுத்துபவர்களாலுமே பிளாஸ்டிக் கரண்டிகள் பெரும்பாலும் நுகர்வோருக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை பாவனைக்குட்படுத்தியவுடன் தூக்கி எறியக்கூடிய பொருட்கள் என்பதால் இவை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இவை அனைத்திற்குமான மாற்று பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார்.