மாவட்ட செயலகம்,முல்லைத்தீவு நீதிமன்ற வளாகங்களில் குவிக்கப்பட்டுள்ள காவற்துறையினர்

வட மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற நீதி அமைச்சின் நடமாடும் சேவையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றன

அந்த வகையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடம்  திறந்து வைக்கப்பட  உள்ளதோடு   அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்  நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது  இந்த வகையிலே இன்றைய தினம் ஓ எம் பி  அலுவலகம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ள நிலையில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடச்சியாக 1786 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தயாராகி வருகின்றனர்

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகம் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றம் முல்லைத்தீவு நகர் பகுதிகளில் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு  புலனாய்வாளர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE