ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதற்கமைய, ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலேசான இருமல், தடிமன் மற்றும் இலேசான தொண்டை நோவு போன்ற சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படாது என்பது மற்றொரு முக்கிய விடயமாகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுவதும் சிறந்ததென வலியுறுத்தப்படுகிறது.