இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் பதவிக்கு கடந்த 14ஆம் திகதி புதிய நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சட்டவிரோதமாக இவ்வாறு நியமிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் அந்த பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கை மின்சார சபையின் புதிய பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.