புதிய கோவிட்-19 மாறுபாடான Omicron குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் தற்போதுவரை 23 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, WHO இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus), இதுபோன்ற நாடுகளின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், Omicron மாறுபாட்டின் தோற்றம் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் கூறினார்.
“ஆறு WHO பிராந்தியங்களில் ஐந்தில் இருந்து குறைந்தது 23 நாடுகள் இப்போது Omicron பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டதாக புகாரளித்துள்ளன, மேலும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று டெட்ரோஸ் கூறினார்.
“WHO இந்த வளர்ச்சியை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, ஒவ்வொரு நாடும் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இது நம்மை ஆச்சரியப்படுத்த விடக்கூடாது.
இந்த வைரஸை நாம் தொடர்ந்து பரவ அனுமதிக்கும் வரை, அது தொடர்ந்து அதன் வேலையை காட்டும்” என்று அவர் கூறினார்.
ஓமிக்ரானைப் பற்றி WHO தொடர்ந்து அதிகமாக ஆய்வு செய்துவருகிறது.
ஆனால் அதன் பரவும் தன்மை, நோயின் தீவிரம் மற்றும் சோதனைகள், சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றி அறிய இன்னும் நிறைய இருக்கிறது என்று டெட்ரோஸ் கூறினார்.