பிரித்தானியாவில் Omicron வைரஸால் மூன்றாவது நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட, புதிய வகை Omicron கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்பதால், உலகின் பல்வேறு நாடுகளில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருவோருக்கு பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜோன்சன், பிரித்தானியாவில் கடைகள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும், அதே நேரத்தில், பிரித்தானியாவிற்கு இனி வெளிநாடுகளில் இருந்து நுழையும் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஏனெனில், பிரித்தானியாவில் Essex மற்றும் Nottingham-ல் இந்த Omicron கொரோனா வைரஸால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.
இதையடுத்து தற்போது மூன்றாவது நபர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அந்த மூன்றாவது நபர் தென் ஆப்பிரிக்காவிற்கு பயணம் செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அவர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டரில் நேரத்தை செலவழித்துள்ளார்.
இதனால் வரும் நாட்களில் பிரித்தானியாவில் இந்த Omicron கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேலும், அந்த நபரின் இருப்பிடம் மற்றும் பயணவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
அதே சமயம் அந்த நபர் தற்போது பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். குறித்த நபர் சென்ற இடங்களில் இப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏனெனில், இந்த வைரஸ் முன்பு இருந்த கொரோனா வைரஸ்களை விட அதிக வேகமாக பரவக் கூடியது என்பதால், சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.