கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து பெரும் சேதம் விதைத்த பெரும் புயல் மெதுவாக அட்லாண்டிக் கனடாவைக் கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த புயலால், புதன்கிழமை western Cape Breton மற்றும் தென்மேற்கு நியூஃபவுண்ட்லாந்து ஆகிய பகுதிகளில் சாலைகள் பாலங்கள் என மொத்தமும் புரட்டிப்போட்டுள்ளது. ஏற்கனவே Cape Breton தீவின் விக்டோரியா மாவட்டத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. பள்ளிகள் மூடப்பட்டதுடன் குடியிருப்பாளர்கள் சாலைப் போக்குவரத்தை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.
பல பகுதிகளில் பெருவெள்ளம் சூழ்ந்ததுடன், குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. மட்டுமின்றி வெள்ளப்பெருக்கில் கழிவுநீரும் கலந்திருப்பதாக பொதுமக்களுக்கு பல பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நியூஃபவுண்ட்லாந்தில் பிரதான சாலையில் சேதம் ஏற்பட்டதால் பெரும்பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி இன்னொரு பிரதான சாலை பெருவெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நோவா ஸ்கோடியாவில் உள்ள கேப் பிரெட்டனின் பெரும் பகுதிகளில் 100 மிமீ முதல் 150 மிமீ வரை மழை பெய்துள்ளது.