WhatsApp பயனர்கள் எச்சரிக்கை ஒரு சிறிய தவறால் நீங்கள் திவாலாகலாம்..!

சமீபத்தில் வாட்ஸ்அப்பில் ஒரு மோசடி வெளிவந்துள்ளது, இதற்கு ‘friend in need’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி: இன்றைய காலகட்டத்தில் சோஷியல் மீடியா ஆப்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. அனைத்து சமூக ஊடக பயன்பாடுகளிலும் மிகவும் பிரபலமான செய்தியிடல் பயன்பாடு WhatsApp ஆகும்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றினாலும், காலப்போக்கில், சைபர் கிரைம் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.

இன்று நாம் வாட்ஸ்அப்பில் மிகவும் பொதுவான ஒரு மோசடி பற்றி பேச போகிறோம். இந்த மோசடிக்கு ‘பிரண்ட் இன் நீட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பின் ‘பிரண்ட் இன் நீட்’ மோசடி

வாட்ஸ்அப்பின் (WhatsApp) இந்த சமீபத்திய மோசடியில், பயனர்கள் தங்களுக்கு மிகவும் பணம் தேவைப்படுவதாக தங்கள் ‘நண்பர்களிடமிருந்து’ செய்திகளைப் பெறுகின்றனர். வெளிநாட்டில் எங்கோ சிக்கியிருப்பதாகவும், தாயகம் திரும்ப பணம் தேவைப்படுவதாகவும் பயனர்கள் தங்கள் நண்பர்களிடமிருந்து வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளைப் பெற்றுள்ளனர்.

இதுபோன்ற மோசடிகளில் பலர் சிக்கியுள்ளனர்.

இங்கிலாந்தின் தேசிய வர்த்தக தரநிலைகளின்படி, இங்கிலாந்தில் வசிக்கும் மக்களில் குறைந்தது 59% பேர் இந்த மோசடியை எதிர்கொண்டுள்ளனர், மேலும் இந்த மோசடியை வாட்ஸ்அப் மூலம் உறுதிசெய்துள்ளதுடன், மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

நேஷனல் டிரேடிங் ஸ்டாண்டர்ட்ஸ் ஸ்கேம்ஸ் குழுவைச் சேர்ந்த லூயிஸ் பாக்ஸ்டர் கூறுகையில், மோசடி செய்பவர்கள் உங்கள் நண்பர் அல்லது உறவினரின் சார்பாக செய்திகளை அனுப்புகிறார்கள், செய்தியை அனுப்புபவர் உங்கள் நண்பர் அல்லது உறவினர் என்று உங்களை நினைக்க வைக்கிறார்கள்.

இதன் மூலம் பணம் பறிப்பது எளிதாகிறது. உங்களுக்குச் செய்தி அனுப்புவதன் மூலம், இவர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களைக் கேட்பார்கள், பணம் கேட்கிறார்கள் அல்லது கணக்கு விவரங்களைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE