அரச – தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படுமா?

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சம்பள அதிகரிப்பு இடம்பெறாவிட்டால், எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

அரச, தனியார் துறையினருக்கு பத்தாயிரம் ரூபா வேதன அதிகரிப்பு அவசியமாகும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றால் தாமும் தயார் என அனைத்து நிறுவனங்களின் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார (Jayantha Bandara), மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாக செயலாளர் கே.டி. லால்காந்த (K D Lalkantha) ஆகியோரும் கருத்து வெளியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE