ஒன்றாரியோவில் அவசர அவசரமாக அதிவேக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம்!

மார்க்கம் அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென விமானமொன்று தரையிறக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றாரியோவில் மார்க்கம் நகரின் 407 அதிவேக நெடுஞ்சாலையில் இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது, ஒரு இன்ஜினைக் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக வீதியில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த விமானம் பறப்பதற்கு முன்னதாக வழமையான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE