இலங்கை தனது இறையாண்மை பத்திரங்கள் அல்லது அமெரிக்க டொலர்களில் வழங்கப்பட்ட பத்திரங்களை திருப்பிச் செலுத்தும் திறனை மேலும் குறைத்துள்ளதாக மூடிஸ் சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மூடிஸ் அதன் கடன் மதிப்பீட்டில் இலங்கையை Caa1 இலிருந்து Caa2 க்கு தரமிறக்கியது.
இலங்கை அரசாங்கத்திற்கான வெளிப்புற பணப்புழக்க ஆபத்து அடுத்த சில ஆண்டுகளில் அதிகமாக இருக்கும் என்றும், ஜூலை 19 அன்று தொடங்கப்பட்ட மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த மதிப்பீடு இருப்பதாகவும் அது கூறியது.இதனால் இலங்கை வங்குரோத்து நிலைகளை நெருங்கியுள்ளது. எவ்வாறாயினும், மூடிஸ் தவறான நேரத்தில் இந்த மதிப்பீட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி பதிலளித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கத் தயாராகி வரும் இவ்வேளையில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கு சவால் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் மத்திய வங்கியும் வருத்தம் வெளியிட்டுள்ளது.