பிரித்தானிய பத்திரிக்கை ஒன்று இந்த ஆண்டின் மூத்த பெண்மணி என்ற பட்டத்தை எலிசபெத் மகாராணிக்கு வழங்க எண்ணிய நிலையில் அதை ஏற்க அவர் மறுத்துள்ளார்.
Oldie பத்திரிக்கை அளிக்கவிருந்த கெளரவத்தையே இரண்டாம் எலிசபெத் வேண்டாம் என கூறியிருக்கிறார். 95 வயதாகும் எலிசபெத் அரச குடும்பத்தில் நீண்ட காலம் வாழ்ந்து வரும் அரசி ஆவார். இதையடுத்தே அவருக்கு மூத்த பெண்மணி பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மகாராணி சொன்ன கருத்தை பத்திரிக்கையானது பிரசுரம் செய்துள்ளது. அதில், முதுமை என்பது நாம் உணர்கிற அளவிலானது தான் என தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பட்டத்துக்கு தாம் தகுதியானவரல்ல என்று நிராகரித்துள்ள மகாராணி, தகுதியான வேறு நபரை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். மகாராணி மறுத்த நிலையில் இந்த ஆண்டின் மூத்தவர் என்ற பட்டம் பிரஞ்ச் – அமெரிக்க நடிகையான லெஸ்லி கரோன் (90)னுக்கு கிடைத்துள்ளது.