சேதனப் பசளை மூலம் நாட்டில் பயிர் செய்கையை மேற்கொள்ளலாம் என பல விற்பன்னர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அந்த விற்பன்னர்களில் பலர் ஜனாதிபதியை கைவிட்டு சென்று விட்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சேதனப் பசளையின் மூலம் பயிர் செய்கையை ஆரம்பித்த விதம் தவறானது.
அதனை முன்னெடுத்த விதமும் தவறு. படிப்படியாக சேதனப் பசளை மூலமாக பயிர் செய்கையை ஆரம்பித்திருக்கலாம் எனவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.