பிரேசில் நாட்டில் படகொன்று ஆற்றில் மூலியத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
பிரேசிலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மோட்டோ கிராஸ்சோ மாகாணத்தில் தென் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றை பராகுவே ஆறு உள்ளது. மோட்டோ கிராஸ்சோ வரும் சுற்றுலா பயணிகள் பராகுவே ஆற்றில் படகு சவாரி செய்வது வழக்கம்.
இதே போல கடந்த வெள்ளியன்று 21 சுற்றுலா பயணிகள் பராகுவே ஆற்றில் படகு சவாரி செய்துள்ளனர். ஆற்றில் நடுப்பகுதிக்கு படகு சென்ற சமயத்தில் சுமார் 145 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் தடுமாறிய படகு கவிழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உளப்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் தாமாக நீந்தி கரை சேர்ந்தனர்.