பிரித்தானியாவில் லொறி சாரதி பற்றாக்குறை காரணமாக எழுந்துள்ள நெருக்கடியால், மக்கள் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கிக்குவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவலின்படி,இந்த நெருக்கடி நிலை காரணமாக 6 பிரித்தானியர்களில் ஒருவர் தமக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியாத நெருக்கடி நிலைக்கு மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நிலவி வரும் லொறி சாரதி பற்றாக்குறை தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வரும் நிலையில், உணவுப்பொருட்களின் தட்டுப்பாடும், விலை உயர்வும் கிறிஸ்துமஸ் பண்டிகையை பெரிதும் பாதிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், மக்கள் தேவைக்கு அதிகமாக பொருட்களை வாங்கிக்குவிப்பதனால் பெரும்பாலான அங்காடிகளில் இறைச்சி, பழங்கள், உறைவித்த உணவுகள் என்பன விற்பனை செய்யப்பட்டு தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும், கனரக சாரதிகளுக்கான பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய,கனரக சாரதி பயிற்சியில் 3,000 பேருக்கு வாய்ப்பிருப்பதாகவும், 5,000 சாரதிகளை உடனடியாக பணிக்கு அமர்த்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.