பிரான்ஸ் நாட்டுக்கான அல்ஜீரியா தூதரை அந்நாட்டு அரசு மீண்டும் அழைத்துள்ளது.
அல்ஜீரியா நாடு குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அல்ஜீரியா நாடானது பிரான்ஸுக்கான தங்கள் நாடு தூதரை திரும்ப அழைத்துள்ளது.
காலனியாதிக்கத்தின்போது பிரான்ஸ் நாட்டினர் அல்ஜீரியாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அகதிகளை ஏற்க மறுப்பது மற்றும் அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளின் அகதிகளின் பிரான்ஸ் நாட்டுக்கு வருவதற்கு தடை உள்ளிட்ட காரணங்களால் இரு நாட்டினர் இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.