சிந்தனையை செம்மைப்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரிக்கும் யோகா
நம் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதுடன், எதையும் தன்மைபிக்கையுடன் அணுக தேவையான நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் யோகா. ஆனால் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டுக்கோப்பான உடல் அமைப்பை மட்டுமே பெற வழி வகுக்கும்.
உடல் உள் உறுப்புகளுக்கும் வெளி தோற்றத்திற்கும் வலு சேர்க்கும் யோகா..!
உடல் முழுதும் அசைவுகள் கொடுத்து, கைகளை நீட்டி மடக்கி திருப்பி யோகா செய்வதால் செரிமானத்திற்கு உதவி புரியும். இதயத்தின் செயல்பாடு சீராக இருக்க செய்யும். ஹார்மோன் சுரப்பை நிலையாக வைத்துக்கொள்ளும். மொத்தத்தில் வலுவான தசைகளை உருவாக்கும். ஆனால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகளை நன்கு வலுவாக்கினாலும் இதயத்தின் வேலைப்பளு அதிகரிக்கும்.
ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.!
நம்முடைய பலம் எது? பலவீனம் எது? என்பதை எளிமையாக புரிந்துக்கொண்டு நாம் எடுத்து வைக்கும் எந்த செயலையும் சரியான பாதையில் கொண்டு செல்ல யோகா வழி வகுக்கும். இதன் மூலம் நம்மை நாமே நன்கு புரிந்துக்கொண்டு வாழ்க்கையின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லும். ஆனால் உ டற்பயிற்சியில் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் போது… எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என்றால் தோல்வி மனப்பான்மை அல்லது மனச்சோர்வு வர வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு அதிக உடல் எடை கொண்ட ஒருவர் குறிப்பிட்ட மாதத்தில் 5 கிலோ எடை குறைத்து இருக்கும் பட்சத்தில் தம்மால் 3 கிலோ எடை மட்டுமே குறைக்க முடிந்தது என்றால்.. ஒருவிதமான தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுவார்கள்
யோகாவில் முழு கவனம்..!
யோகா நிலையங்களில் கண்ணாடி வைப்பது கிடையாது. எனவே நம் முழு கவனமும் யோகா செய்வதில் இருக்கும். குறிப்பாக நாம் எங்கு அமர்ந்து உள்ளோம்; நம் உடல் என்ன செய்கிறது; உடலில் நடக்கும் சிறு சிறு அசைவுகள் என அனைத்தையும் எளிதாக உணர்ந்து, மனதை ஒரு நிலைப்படுத்த முடியும். ஆனால் உடற்பயிற்சி கூடத்தில் இப்படி ஒரு வாய்ப்பு இருக்காது. கண்ணாடி பார்த்துக்கொண்டே பயிற்சி செய்வதால்.. நம் உடல் அமைப்பு பற்றிய கவலை நமக்குள் வந்துக்கொண்டே இருக்கும்.
ஸ்லிம் பிட் (அழகான உடலம்மைப்பை) கொடுக்கும் யோகா
கை கால்களை நீட்டி மெதுவான அசைவுகளை மிருதுவாக கொடுப்பதால், உடல்தசை வலுப்பெற்று அழகான உடலமைப்பை பெற முடியும். ஆனால்… அதிக எடையுடன் உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் வலுப்பெற்று கடினமான உடல் தோற்றத்தை கொடுக்கும்.