டி20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஷூவில் பீர் ஊற்றி குடித்தது இணையத்தில் வைலாகியுள்ளது.
நேற்று துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
இந்த வெற்றியை ஆஸ்திரேலிய அணியினர் கோலாகலமாக கொண்டாடினர். டிரெஸ்ஸிங் ரூம்மில் ஆஸ்திரேலிய வீரர்கள் பாட்டு போட்டு பீர் குடித்துக்கொண்டே டான்ஸ் ஆடிய வீடியோவை ஐசிசி பகிர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலிய வீரர்கள் ஷூவில் பீர் ஊற்றி குடித்து கொண்டாடிய வீடியோவையும் ஐசிசி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில், டிரெஸ்ஸிங் ரூம்மில் கொண்டாட்டத்தின் போது ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட், தான் போட்டிருந்த ஷூவை கழட்டி அதற்குள் பீரை ஊற்றி குடித்து, ஆரவாரமாக இரு கைகளையும் உயர்த்தி காட்டுகிறார்.
உடனே, வேட் கையில் வைத்திருந்து ஷூவை பறித்த ஸ்டோனிஸ், தான் கையில் வைத்திருக்கும் பீரை அதற்குள் ஊற்றி அவரும் குடித்தார்.
பின், ஸ்டோனிஸிடம் ஷூவை வாங்கிய வேட், அதை மீண்டும் தனது காலில் மாட்டிக்கொண்டார். ஐசிசி பகிர்ந்துள்ள குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
How’s your Monday going? 😅#T20WorldCup pic.twitter.com/Fdaf0rxUiV
— ICC (@ICC) November 15, 2021