
கென்யாவில் பாதிரியார் ஒருவரது பண்ணையில் தோண்ட தோண்ட சடலங்களாக வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோர பகுதியான மாலின்டி நகரில் குறிப்பிட்ட மதப்பிரிவை பின்பற்றும் பாதிரியார் பால் மெகன்சி என்பவர் உள்ளார். அவருக்கு சொந்தமான பண்ணையில் 15க்கும் மேற்பட்டோர் உடல் மெலிந்து இருப்பதாகவும், அவர்களில் நான்கு பேர் இறந்து விட்டதாகவும் கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:
பாதிரியார் பால் மெகன்ஷியை கைது செய்துள்ளோம். ஏற்கனவே அந்த பகுதியில் குழந்தைகள் இறப்புக்கு காரணமான சம்பவம் தொடர்பாக, அந்த பாதிரியார் இரண்டு முறை கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையாகியிருந்தார்.என கூறியுள்ளனர் .