மின் கட்டணத்தினை அதிகரித்தது பொறியியலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக அல்ல என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திலும் மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் மீதான விவாதத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“.. ஓராண்டாக மின்வெட்டு நிறுத்தப்பட்டது. எங்களுக்கு கூடுதல் பணம் மானியமாக வழங்கப்படவில்லை. செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும். கட்டண திருத்தத்திற்குப் பிறகு, நாங்கள் கடன் வாங்க முடிந்தது. முக்கிய வங்கிகள் தேவையான நிதியை வழங்கின. அதன்படி, கொஞ்சம் எரிபொருள் வாங்கப்பட்டது. இந்த நாட்டில் தொடர்ந்து மின்சாரம் வழங்க கூடாது என சிலர் விரும்புகின்றனர். பொறியாளர்கள் சங்கம் போனஸ் கேட்கிறது. மேலதிக நேர கொடுப்பனவுகளை கேட்கின்றனர்.அது கிடைக்காத போது வீதியில் இறங்கி விடுவதாக கூறுகின்றனர். மின் கட்டணத்தை உயர்த்தியது போனஸ் அல்லது சலுகைகளுக்காக அல்ல. ..” எனத் தெரிவித்திருந்தார்.