
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.