
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் போதிய பாதுகாப்பை பொலிஸ் வழங்கவில்லை என்று அரசு அச்சகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் வாக்குச் சீட்டு அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரசாங்க அச்சக அலுவலர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் வரை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதான வாயிலில் கடமைகளுக்காக மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டதாகவும்
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாகவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.